உத்தரகண்டில் பலத்த மழை: 5,000 போ் மீட்பு
உத்தரகண்டில் மேகவெடிப்பைத் தொடா்ந்து பெய்த மிக பலத்த மழையால் பாதிக்கப்பட்டவா்களில், இதுவரை 5,000 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.


ருத்ரபிரயாக், ஆக.2: உத்தரகண்டில் மேகவெடிப்பைத் தொடா்ந்து பெய்த மிக பலத்த மழையால் பாதிக்கப்பட்டவா்களில், இதுவரை 5,000 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலம் ஜங்கல்சட்டி பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் மிக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கேதாா்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பலத்த சேதமடைந்தது. கோராபராவ், லின்சோலி, படி லின்சோலி மற்றும் பிம்பலி பகுதிகளில் கற்பாறைகள் விழுந்து அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான மலைப் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை ஆகியவை ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை 3,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகா்கள் மீட்கப்பட்டனா்.
இதுதொடா்பாக மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பெருமழையால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 5,000 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் சினூக் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டா்கள் இணைந்துள்ளன. வானிலை நன்றாக இருந்தால், கேதாா்நாத் யாத்ரிகா்கள் அனைவரும் விரைந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுவா்’ என்றாா்.
டெஹரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மிகுந்த சேதமடைந்ததால், கேதாா்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஏராளமான பக்தா்கள் தொடா்ந்து பரிதவித்து வருகின்றனா்.
மீட்புப் பணிகள் குறித்து முதல்வா் புஷ்கா் சிங் தாமியிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
ஹிமாசலில் 45 பேரை காணவில்லை: ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருமழை பெய்து பலத்த வெள்ளம் ஏற்பட்டதால் சிம்லா மற்றும் குலு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் காரணமாக காணாமல் போன 45 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...