காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முண்டக்கையில் 114% அதிகப்படியான மழைப்பொழிவு

முண்டக்கையில் 114% அதிகப்படியான மழைப்பொழிவு பதிவானதாகத் தகவல்

News image
முண்டக்கை - நிலச்சரிவு
Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:38 pm

DIN

கல்பேட்டை: நிலச்சரிவினால் நிலைகுலைந்துப்போன முண்டக்கைப் பகுதியில் 2023ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 114 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, புதுமலை மற்றும் சூரல்மலை பகுதிகளில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் 2981 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜூலை 28 மற்றும் 29ஆம் தேதிகளில் இங்கு 572 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் ஜூலை 30ஆம் தேதி முண்டக்கை பகுதியில் கடும் நிலச்சரிவு நேரிட்டுள்ளது.

கடந்த ஜுனில் மட்டும் 888 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. ஜூலையில் 2,093 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பருவமழை காலத்தின்போது 2000 மி.மீ. கடந்தது கடந்த 2020ஆம் ஆண்டுதான். அப்போது கேரளத்தில் கனமழை பெய்து வெள்ளம் நேரிட்டது. அப்போது 2353 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை இரவு 400 மி.மீ. மழைப்பொழிவு தாண்டியபோது, உள்ளூர் நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக ஒரு சில பகுதிகளிலிருந்து 15 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை முற்பகல் முதலே, தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணிகளின் தங்கும் அறைகளிலிருந்து அனைவரையும் காலி செய்துகொண்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அபாயப் பகுதிக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு, இரவு 10.35 மணிக்குத்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, மழை பெய்துகொண்டிருந்ததால், மக்கள் தாங்களாக வெளியேறாமல் இருந்துவிட்டன, செவ்வாய்க்கிழமை அதிகாலை மிகப் பயங்கர நிலச்சரிவு நேரிட்டு பல பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் உருகுலைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.