கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேலும் ஒரு ரயில் விபத்து! பயணிகள் ரயில் தடம் புரண்டது

பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.

News image
- கோப்புப்படம் | ஏஎன்ஐ
Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:48 pm

DIN

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் சஹாரன்புர் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) பகல் 1.30 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு அதன்பின் ரயில் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த தில்லி - சஹாரன்புர் மெமு பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக பிற ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

முன்னதாக, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கோர்பா- விசாகப்பட்டினம் விரைவு ரயிலில்(18517)’ குளிர்சாதன வசதி கொண்ட 3 பெட்டிகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.