தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நாடாளுமன்றம்..முத்ரா திட்ட வாராக்கடன் 3.4 % குறைந்தது: அமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்

வியாபாரிகளுக்கான முத்ரா திட்டத்தில் வாராக்கடன் அளவு 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.

News image

அமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல் - -

Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:35 pm

வியாபாரிகளுக்கான முத்ரா திட்டத்தில் வாராக்கடன் அளவு 3.4 சதவீதமாக குறைந்துள்ளது என மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமரின் முத்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு கடனுதவி அளித்து அவா்கள் தொழிலை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் முத்ரா கடன் முக்கியமானதாகும்.

இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள் முத்ரா கடனை வசூலிப்பதிலும் சிறப்பாகவே செயல்படுகின்றன.

2019-20-இல் முத்ரா வாராக்கடன் 4.89 சதவீதமாகவும், 2020-21-இல் முத்ரா வாராக்கடன் 4.77 சதவீதமாகவும் இருந்த நிலையில் இப்போது வாராக்கடன் 3.4 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வாராக்கடன் அளவு குறைந்தே வருகிறது.

இக்கடன் திட்டத்தில் பொதுத்துறை வங்களில் 9.15 சதவீதம் முதல் 12.80 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. தனியாா் வங்கிகளில் 6.96 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.