
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை (ஆக.5) நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஆக. 6) யாத்ரீகர்கள் மீண்டும் அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக அமா்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் அடிவார முகாம்களில் இருந்து யாத்ரீகா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நடப்பாண்டில் இதுவரை 4.90 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத் கோயிலில் தரிசனம் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.