மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பயிற்சியாளர்கள் விடுமுறைக்கு சென்றார்களா? வினேஷ் போகத் இல்லத்தில் பஞ்சாப் முதல்வர் பேட்டி!

ஹரியாணாவில் உள்ள வினேஷ் போகத்தின் உறவினரை சந்தித்து பகவந்த் மான் ஆறுதல் கூறினார்.

News image

பகவந்த் மான் (கோப்புப்படம்) - Din

Updated On :7 ஆகஸ்ட் 2024, 10:19 am

ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆறுதல் கூறினார்.

ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி பகுதியில் உள்ள வினேஷ் போகத்தின் மாமா மகாவீர் போகத்தை புதன்கிழமை நேரில் சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.

அப்போது பேசிய பகவந்த் மான், “உயர்மட்ட அளவில் தவறு நடந்துள்ளது, லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பயிற்சியாளர்களும் உடற்பயிற்சி நிபுணர்களும் விடுமுறையை கழிக்கவா சென்றிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், “வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், ஒலிம்பிக்கை புறக்கணித்துவிட்டு நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.

இதனால், இரவு முழுக்க கடும் பயிற்சி மேற்கொண்ட போதும், 100 கிராம் அதிக எடை இருந்ததால் வினேஷ் போகத்தை தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டது.

வினேஷ் போகத்துக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், நீர் சத்து குறைந்தததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.