சுதந்திர நாள்.. தில்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது

சுதந்திர நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் தில்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது
பயங்கரவாதியை என்ஐஏ கைது செய்தது - கோப்புப்படம்
பயங்கரவாதியை என்ஐஏ கைது செய்தது - கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தில்லியில் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்வராதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ரிஸ்வான் அலி என்ற பயங்கரவாதியை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று கைது செய்திருக்கிறது.

இவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாவார். ரிஸ்வான் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது என்ஐஏ.

பயங்கரவாதியை என்ஐஏ கைது செய்தது - கோப்புப்படம்
கூடுதலாக இருந்த 100 கிராம்: இந்திய இதயங்களை வென்ற வினேஷ் போகத்!

தில்லியின் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பாதியில் படிப்பை கைவிட்டவர் ரிஸ்வான் என்றும், இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆள் சேர்ப்பது உள்ளிட்ட சில பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இவர் இருந்த இடத்திலிருந்து வெடிபொருள்கள், டிரோன், முகாம் அமைப்பதற்கான பொருள்கள், எலாக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர் மற்றும் இவரது கூட்டாளிகள், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பயங்கரவாத சதிச் செயல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்ட ஆயுதத்துடன் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டதாகவும் என்ஐஏ குற்றம்சாட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com