
கர்நாடகத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தர்லகத்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கிபாய்(50வயதுபெண்). இரண்டு மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணின் காலில் வளர்ப்பு பூனை கடித்துள்ளது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று ஒரு ஊசி போட்டிருக்கிறார். அதில் அந்த பெண் குணமடையவே மற்ற ஊசிகள் போடவில்லை.
இந்த அலட்சியம் அவரைது உயிரைப் பறித்துள்ளது. பூனை கடித்ததால் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு பெண் பலியானாமருத்துவர் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கு ரேபீஸ் நோய் பெரும்பாலும் நாய் கடியால் ஏற்படுகிறது. ஆனால் பூனை மூலம் ரேபீஸ் நோய் பரவி பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அந்த பூனை, பெண்ணை கடிக்கும் முன் இளைஞர் ஒருவரையும் கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதேபோல் உத்தர பிரதேசத்தின் அக்பர்புர் நகரில் அரசு ஆசிரியரையும், அவரது 24 வயது மகனையும் அவர்களது வளர்ப்பு பூனை கடித்து கீறியுள்ளது.
இதில் ரேபீஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு இருவரும் ஒரு வாரத்தில் இறந்தனர். காரணம், பூனையை தெருநாய் கடித்ததால் அதன்மூலம் ரேபீஸ் நோய்க்கிருமி அந்த பூனைக்கும் பரவியதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.