நம்பியூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள சாணாா்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி அய்யம்மாள் (60), கூலி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வீட்டுக்கு வெளியே கிடந்த தென்னை மட்டைகளை கடந்த 18-ஆம் தேதி இரவு அடுக்கி வைத்து கொண்டிருந்தாா். அப்போது, தென்னை மட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பு, அய்யம்மாளின் இடது கையில் கடித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பாம்பு கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


