கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பஞ்சாபில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

பஞ்சாபில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ள நீர் காரை அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர்.

News image

வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:02 pm

DIN

பஞ்சாபில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ள நீர் காரை அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர்.

பஞ்சாபின் பெய்த கனமழையின் காரணமாக பருவகால ஆறான ஜய்ஜான் சோவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பஞ்சாபில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் இன்று சென்றுகொண்டிருந்தனர்.

இவர்களுடைய கார், ஜய்ஜான் சோ ஆற்றை கடக்கும்போது, ​​காரை வெள்ளநீர் அடித்துச்சென்றது. ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று ஓட்டுநரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்துள்ளார்.

இருப்பினும், அதில் தீபக் பாட்டியா என்வரை மீட்ட உள்ளூர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது இந்த பதைபதைக்கும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.