மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ அதிகாரி பலி!

அமெரிக்க துப்பாக்கி, ரத்தத்தால் நனைந்த பைகள் கைப்பற்றப்பட்டது

News image

கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:39 am

வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிக்க முயன்றபோது ராணுவ அதிகாரி பலியானார்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் அசார் வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ராணுவப் படையின் ஒரு குழுவினர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஆக. 13, செவ்வாய்க்கிழமை, இரவுநேரத்தில் ராணுவ வீரர்களுக்கும், 4 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னர், இன்று காலை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தத் தாக்குதலின்போது, இராணுவ அதிகாரி கேப்டன் தீபக் சிங் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 ரகத் துப்பாக்கி, ரத்தத்தில் நனைந்த மூன்று பைகள், பிற உபகரணங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நாளை (ஆக. 15) சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ராணுவ வீரரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.