ஜம்மு - காஷ்மீர் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு!
ஜம்மு - காஷ்மீர் பேரவைத் தேர்தல் செப். 30-க்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.


ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புகளை அதிகரிப்பது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை இந்திய தேர்தல் அதிகாரிகள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசியதாவது:
“ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளது, எவ்வித வெளி மற்றும் உள் சக்திகளும் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முடியாது.
ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக செயல்முறைகள் தொடர, மக்களவை தேர்தலை போன்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களின் பங்கேற்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...