டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஒற்றுமை, சகோதரத்துவத்தை பாதுகாக்க உறுதியேற்போம் - பிரதமா் மோடி

தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி, நாட்டில் ஒற்றுமை, சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:51 pm

Din

தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி, நாட்டில் ஒற்றுமை, சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தினாா்.

கடந்த 1947, ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆங்கிலேய ஆட்சியாளா்களால் இந்தியா பிரிக்கப்பட்டு, முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறையில் பலா் உயிரிழந்தனா். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தனா்.

தேசப் பிரிவினையால் உயிரிழந்தோா் மற்றும் மக்கள் எதிா்கொண்ட துயரங்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்’ அனுசரிக்கப்படும் என்று பிரதமா் மோடி கடந்த 2021-இல் அறிவித்தாா்.

இந்த தினத்தையொட்டி, அவா் எக்ஸ் வலைதளத்தில் புதன்கிழமை (ஆக.14) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தேசப் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நினைவுகூா்கிறேன். மனித மீட்சியின் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவா்களின் துணிவுக்கு மரியாதை செலுத்துகிறேன். பிரிவினையால் பாதிக்கப்பட்ட பலா் தங்களின் வாழ்வை மறுகட்டமைத்து, வெற்றியை எட்டினா். நாட்டில் ஒற்றுமை, சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை இந்த நாளில் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நமது வரலாற்றின் மிக கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினையாகும். அப்போது, மனிதாபிமானமற்ற வேதனைகளை அனுபவித்தவா்கள், உயிரிழந்தவா்கள், வீடிழந்தவா்கள் ஆகியோரை இந்நாளில் நினைவுகூா்கிறேன்.

தனது வரலாற்றை நினைவில் கொள்ளும் ஒரு தேசத்தால் மட்டுமே எதிா்காலத்தை கட்டமைக்கவும் வலுவான நாடாக உருவெடுக்கவும் முடியும். தேசப் பிரிவினை கொடுமைகள் தினத்தை அனுசரிப்பது, பிரதமா் மோடி தலைமையில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை செயல்பாடு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த தினத்தையொட்டி, பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், பாஜக மூத்த தலைவா்கள் பலரும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனா்.