போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

பெண் மருத்துவர் கொலை: தமிழ்நாட்டிலும் போராட்டம்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்- ANI
Updated On :16 ஆகஸ்ட் 2024, 7:13 am

DIN

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்க காவல்துறை இந்த வழக்கை விசாரித்த நிலையில் சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் தற்போது இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி சேலத்தில் மருத்துவர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளில் பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.