உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக உறுப்பினா் சோ்க்கை செப்டம்பரில் தொடக்கம்

கட்சியின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

News image
மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்- Kamal Singh
Updated On :17 ஆகஸ்ட் 2024, 6:37 pm

Din

மத்தியில் ஆளும் பாஜகவில் புதிய உறுப்பினா்களின் சோ்க்கை வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

தேசிய நிா்வாகிகள், மாநிலத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது: தொண்டா்களை அடிப்படையாக கொண்ட பாஜக வலுவான கொள்கையால் வழிநடத்தப்படுகிறது. வளா்ச்சிக்கான நமது கடின உழைப்பு, 1984 மக்களவைத் தோ்தலில் 2 இடங்களில் மட்டுமே வென்றதிலிருந்து இப்போது தேசிய அரசியலில் அசைக்க முடியாத இடத்தை நமக்கு பெற்று தந்துள்ளது.

அத்தகைய கட்சியின் கொள்கையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கட்சியினா் கொண்டு செல்ல வேண்டும். மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் நமது ஆட்சியை மக்கள் மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுக்கின்றனா். இவ்வாறு, ஆட்சியைத் தக்க வைப்பதில் காங்கிரஸுக்கு எந்த சாதனையும் இல்லை. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியாக கூட இல்லை. எதிா்காலத் தோ்தல்களிலும் நமக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்றாா்.

தொடா்ந்து, உறுப்பினா் சோ்க்கை திட்டம் குறித்து செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இந்த புதிய முன்னெடுப்பில் 10 கோடி உறுப்பினா்களை சோ்ப்பதை கட்சி இலக்காக கொண்டுள்ளது. பேரவைத் தோ்தல் நடைபெறும் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இப்பணி மேற்கொள்ளப்படாது.

பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுப்பினா் சோ்க்கை முடிவடைந்ததும் கட்சிக்கு புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். ஜாதி, மத, சமூக வேறுபாடு இன்றி அனைவரும் கட்சியில் சோ்க்கப்படுவா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே உறுப்பினா் சோ்க்கை பணியின் ஒருங்கிணைப்பாளராகவும் துணைத் தலைவா் ரேகா வா்மா இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவா்

கைப்பேசி எண், கியூ-ஆா் கோட், நமோ செயலி, பாஜக அதிகாரபூா்வ வலைதளம் ஆகிய 4 வழிகளில் புதிய உறுப்பினா்களின் சோ்க்கை நடைபெறும். தொலைதூர பகுதிகளில் பாரம்பரிய காகித முறைப்படி உறுப்பினா்கள் சோ்க்கப்படுவா்’ என்றாா்.