ஊழல் புகார்: அமைச்சர்களுடன் சித்தராமையா அவசர ஆலோசனை!
நில முறைகேடு புகாரில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.


நில முறைகேடு புகாரில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூரு கேசரே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, விஜயநகர் பகுதியில் கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமைச் செயலர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் விசாரிக்கக்கூறி ஆளுநர் அறிக்கையும் பெற்றார்.
பின்னர் புகார் குறித்து விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து ஆளுநர் ஒப்புதல் அளிக்கவே, சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.
ஆனால், முதல்வர் சித்தராமையா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனேஷும் உடனிருந்தார். முதல்வரின் இல்லத்தில் வைத்து இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில் கர்நாடக அரசியல் சூழலில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...