ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகுகிறார் சம்பயி சோரன்!

ஜார்க்கண்ட்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு - முன்னாள் முதல்வர் பாஜகவில் ஐக்கியம்...

News image
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:40 pm

DIN

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சம்பயி சோரன் கூறியிருப்பதாவது, தனக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் ஜேஎம்எம்-இல் கிடைக்கவில்லை என்றும், பல்வேறு அவமானங்களைச் சந்தித்துவிட்டதாகவும், இதன் காரணமாக, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் கனத்த இதயத்துடன் பேசியதையும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய வாழ்வில் இன்றிலிருந்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பமாகிறது. என் முன் 3 வாய்ப்புகள் உள்ளன; ஒன்று, நான் அரசியலிலிருந்து விலக வேண்டும், இரண்டு, தனியாகக் கட்சி ஆரம்பிக்கலாம், மூன்று, எனக்கு துணையாக இந்த பாதையில் பயணிக்க யாரேனும் துணைக்கு வந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்.

எதிர்வரும் ஜார்க்கண்ட சட்டப்பேரவைத் தேர்தல் வரை, எனக்கு மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அவற்றுள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கட்சியை காயப்படுத்தும் நோக்கம் தன்னிடம் இல்லை என்றும், எந்தவொரு கட்சி உறுப்பினரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும் தனது பதிவில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “ஒரு முதல்வராக நான் பொறுப்பு வகித்த காலத்தில் என் கடமையை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். நம்முடைய ரத்தமும் வியர்வையும் ஊட்டி வளர்க்கப்பட்ட கட்சியை காயப்படுத்தும் எண்ணம் ஒருபோதும் எழாது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.