ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் பேரன் வீர் சோரன் மணாலியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் பேரனான வீர் சோரன் (வயது 19) கடந்த பிப்.22 அன்று ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலிக்கு அவரது நண்பர்கள் சிலருடன் சுற்றுலாப் பயணம் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிப். 23 அன்று மதியம் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு விடுதி அறைக்குத் திரும்பி வந்துள்ளார். அப்போது, வீர் சோரனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் நண்பர்கள் வழங்கிய மருந்துகளை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சில மணிநேரம் கழித்து அவரது அறையிலிருந்து பயங்கரச் சத்தம் வந்ததாகவும், அங்குச் சென்று பார்த்தபோது வீர் சோரன் படுக்கையில் கிடந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அன்றிரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வீர் சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, தகவலறிந்தவுடன் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் வீர் சோரனின் தந்தை பாபுலால் சோரன் ஆகியோர் ராஞ்சியில் இருந்து தில்லி சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Veer Soren, grandson of former Jharkhand Chief Minister Sambhai Soren, has died mysteriously in Manali.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைகிறது: நாராயணசாமி!

லண்டனில் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின்!
‘விசில் சப்தம் மேலும் ஒலிக்கட்டும்’... தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

உடல் உறுப்புகள் மாயமானது எப்படி? அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை! இந்திய மாலுமியின் மனைவி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




