தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாய் காலமானார்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாய் ரூபி சோரன் மறைவு பற்றி...

rubi soren

ரூபி சோரன் (கோப்புப்படம் ) - ANI

Published On :8 அக்டோபர் 2026, 10:27 am IST

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயாரும், முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான ஷிபு சோரனின் மனைவியுமான ரூபி சோரன் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.

80 வயதான ரூபி சோரன், ஹைதராபாத் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து ராஞ்சி திரும்பினார்.

இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தில்லியில் ஷிபு சோரன் காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, சமீபத்தில் ரூபி சோரன் பெற்றார்.

ரூபி சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், ”ரூபி சோரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பழங்குடியின சமூகங்களை மேம்படுத்துவதற்காக அவர் எப்போதும் பாடுபட்டார். துயரத்தின் இந்த வேளையில், ஹேமந்த், கல்பனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Jharkhand Chief Minister Hemant Soren's mother has passed away!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.