ஜார்க்கண்ட்: மாமா கொடுத்த கைத்துப்பாக்கி வெடித்ததில் 3 வயது சிறுவன் பலி!
ஜார்க்கண்டில் தாய்மாமா கொடுத்த கைத்துப்பாக்கி வெடித்ததில் 3 வயது சிறுவன் பலியானது பற்றி...

கோப்புப்படம்.
ஜார்க்கண்டில் தாய்மாமா கொடுத்த கைத்துப்பாக்கி வெடித்ததில் 3 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில், தாய்மாமா கொடுத்த துப்பாக்கியுடன் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், அந்தத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை மராஃபாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்னல் மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக தெரிவித்தனர் என்று மராஃபாரி காவல் நிலைய அதிகாரி சஞ்சய் குமார் கூறினார்.
"தாய்மாமா கொடுத்த துப்பாக்கியுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவன் உயிரிழந்துள்ளான். எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி வெடித்ததில், சிறுவன் மீது குண்டு பாய்ந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
சிறுவனின் தாய்மாமாவான ராஜேஷ் குமார் (21), துப்பாக்கியுடன் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அவரைப் பிடிப்பதற்காகப் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குழந்தையின் தாயார் அளித்த தகவலின்படி, தனது சகோதரர் (குழந்தையின் தாய்மாமா) காலை வேளையில் வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவன் அவரிடம் சாக்லேட் கேட்டுள்ளான். அதற்குப் பதிலாக, சிறுவனிடம் அவர் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார்.
சிறுவன் அந்தத் துப்பாக்கியுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்துவிட்டதாகத் தாயார் கூறியுள்ளார்.
Summary
A three-year-old boy allegedly died after a pistol given to him by his maternal uncle went off while he was playing with it in Jharkhand's Bokaro district on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


