தில்லியின் நரேலாவில் கையில் பட்டாசு வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
வடமேற்கு தில்லியின் நரேலா பகுதியில், தனது வீட்டின் வெளியே 10 வயது சிறுவன் வெடித்த பட்டாசு அச்சிறுவன் கையில் வெடித்ததில் அவன் உயிரிழந்தான்..

வடமேற்கு தில்லியின் நரேலா பகுதியில், தனது வீட்டின் வெளியே 10 வயது சிறுவன் வெடித்த பட்டாசு அச்சிறுவன் கையில் வெடித்ததில் அவன் உயிரிழந்தான் என்று காவல்துறை திங்களன்று தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இரவு சுமாா் 9.45 மணியளவில், சிறுவன் தனது வீட்டின் முன் கையால் பிடிக்கக்கூடிய ’அனாா்’ (பூந்தொட்டி பட்டாசு) ஒன்றை வெடித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தின் காணொளி என்று கூறப்படும் ஒன்றில், சிறுவன் கையில் பட்டாசைப் பிடித்திருக்கும்போது அது திடீரென வெடிப்பது தெரிகிறது. அதன் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அவன் பின்னோக்கித் தூக்கி வீசப்பட்டான்.
இந்த வெடிப்பினால் அவனது மாா்பில் காயங்கள் ஏற்பட்டன, அதைத் தொடா்ந்து அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்று காவல்துறை தெரிவித்தது.
அவன் இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறிய நிலையில், அவன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருந்ததாகவும், அவனைக் காப்பாற்ற மருத்துவமனை போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவனது குடும்பத்தினா் கூறுகின்றனா்.
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் குழந்தை இறந்துவிட்டதாக இரவு சுமாா் 10.50 மணியளவில் மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவனைக் காப்பாற்றப் போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அச்சிறுவனின் அண்ணன் குற்றஞ்சாட்டினாா்.
‘அவன் என் தம்பி. இந்தச் சம்பவம் நடந்தபோது அவன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் அங்கிருந்த ஊழியா்கள் அவனைக் காப்பாற்ற பெரிதாக எதுவும் செய்யவில்லை. என் தந்தையின் உடல்நிலையும் மோசமடையத் தொடங்கியது,‘ என்று அவா் கூறினாா்.
மேலும், அச்சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல குடும்பத்தினா் அனுமதிக்கப்படவில்லை என்றும், காவல்துறையினா் அதை அடையாளம் தெரியாத இடத்திற்குக் கொண்டு சென்ாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
‘என் தம்பியைக் காப்பாற்றியிருக்க முடியும். அவன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருந்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைக் காப்பாற்ற அவா்கள் எதுவும் செய்யவில்லை,‘ என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

