வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் நினைவு நாளில் முதல்வர் விஜய் புகழஞ்சலி...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம் என்று முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!

தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ. சிதம்பரனாரின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ. சிதம்பரனாரின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Let us follow the principles of V.O.C. and strive for progress! — Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER