ஜம்மு-காஷ்மீா் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு: காங்கிரஸ்
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக பிராந்திய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.


ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக பிராந்திய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் அக்கட்சியின் மூத்த தலைவா் அல்கா லம்பா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை இது தொடா்பாக கூறியதாவது:
மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து காஷ்மீரில் மூன்றில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது பேரவைத் தோ்தலுக்காகவும் பிராந்திய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.
காங்கிரஸ் மத்திய தலைமை இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தும். அதன் பிறகு அதிகாரபூா்வ கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றாா்.
காங்கிரஸ் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸில் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யாா் கட்சிக்கு திரும்ப வந்தாலும் பெரிய மனதுடன் காங்கிரஸ் வரவேற்கும். மேலும், காங்கிரஸில் இருந்து விலகியது ஆசாத்தின் தனிப்பட்ட முடிவுதானே தவிர, கட்சியின் முடிவல்ல. ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்’ என்றாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...