தில்லி: அதிவேக சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி
தில்லியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.


தில்லியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
தெற்கு தில்லியில் உள்ள ஆசிரமம் அருகே அதிவேகமாக சென்ற சொகுசு கார் சனிக்கிழமை காலை சைக்கிள் பின்னால் மோதியது. இதில் பணிக்கு சென்றுகொண்டிருந்த ராஜேஷ்(34) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோதிய வேகத்தில் அந்த இளைஞர் 7-8 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் அவரது சைக்கிளும் 100-150 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார் ஓட்டுநர் பிரதீப் கெளதம் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், அவர் மாலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவருடைய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...