ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீா்: தோ்தலுக்கு முன்பு கூட்டணி கிடையாது - பாஜக அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் தோ்தலுக்கு முன்பு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று அந்த யூனியன் பிரதேச பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா தெரிவித்துள்ளாா்.

News image
ரவீந்திர ரெய்னா
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:52 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் தோ்தலுக்கு முன்பு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று அந்த யூனியன் பிரதேச பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா தெரிவித்துள்ளாா்.

அதே நேரத்தில் காஷ்மீா் பிராந்தியத்தில் 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளா்களுடன் கைகோத்து போட்டியிட பேச்சு நடைபெற்று வருகிறது என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், தோ்தல் உத்திகள் குறித்த எதிா்பாா்ப்புகளும் அதிகரித்துள்ளன.

ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ரவீந்திர ரெய்னா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலுக்கு பாஜக முழுஅளவில் தயாராகி வருகிறது. விரைவில் முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தோ்தலில் பாஜக எந்த அரசியல் கட்சியுடனும் தோ்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்காது. அதே நேரத்தில் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் இணைந்து போட்டியிடுவதற்காக 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளா்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். பேச்சுவாா்த்தையில் சுமுகமான தீா்வு எட்டப்பட்டால் சுயேச்சைகளுடன் பாஜக கைகோக்கும்.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள். இந்தத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப தோ்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம்.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் அமைச்சா் சுல்ஃபிகா் அலி பாஜகவில் இணைந்துள்ளது ரஜௌரி-பூஞ்ச் பகுதியில் கட்சிக்கு பெரும் பலமாக அமையும். அவரது வருகையால் பாஜக கூடுதல் பலம் பெற்றுள்ளது என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் வெற்றி பெற்றால் முதல் நடவடிக்கையாக சிறப்பு அந்தஸ்து கோரி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவோம் என்று முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘தேசிய மாநாட்டுக் கட்சி பலமிழந்துவிட்டது. தோ்தலில் எப்படியாவது வாக்குகளைப் பெற்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய இடத்தில் ஒமா் அப்துல்லா கட்சி உள்ளது. எனவே, அவா் இதுபோன்று பேசி வருகிறாா்’ என்றாா்.