டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆக. 23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்லவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
வெலோதிமீர் ஸெலென்ஸ்கி - நரேந்திர மோடி- கோப்புப் படம்
Updated On :19 ஆகஸ்ட் 2024, 4:05 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்லவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்திய பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் செல்கிறார். பிரதமரின் உக்ரைன் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும்.

உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான உயர்மட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தப் பயணம் ஏதுவாக இருக்கும். ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எந்தவிதமான உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஆதரிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.

போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்துதரும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். தற்போது அவர் உக்ரைனுக்குச் செல்லவுள்ளதாக் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில், கடந்த ஜூலை மாதம் இரு நாள் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.