புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டாக்ஸி ஓட்டுநருடன் ராகுல் காந்தி -போராட்டமே வாழ்க்கையா..!

வலி நிறைந்த வாழ்க்கைப் பயணம்! ராகுல் பதிவிட்டுள்ள காணொலி

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 2:15 pm

DIN

சாமானிய மக்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களும் சிரமங்களும் ஏராளம். இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கால்டாக்ஸி ஓட்டுநருடன் காரில் சென்று அவரது குடும்பத்துடன் ஹோட்டலில் உணவருந்தி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த காணொலியை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியின் செயலை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கால்டாக்ஸி ஓட்டுநர் சுனில் உபாத்யாய் ஜியுடன் அவரது மனைவியும் இரு மகள்களும் ராகுல் காந்தியுடன் உரையாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து, ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, “குறைந்த வருமானம், விலைவாசி உயர்வு மக்களை அழிக்கிறது.

இந்த நிலையில், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிய முடிந்தது.

Story image

’கைக்கும் வாய்க்கும் மட்டுமே போதுமானதாக உள்ள குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும்’ இத்தகைய தொழிலாளர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்தில் உள்ளது. எவ்வித சேமிப்பும் இல்லை, குடும்பத்தின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க முடியாத சூழலில் வாழ்கின்றனர்.

காங்கிரஸ் அரசு நிலையான கொள்கைகளால் தொழிலாளார்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். இந்தியா கூட்டணியின் சொந்தங்கள் முழுவீச்சில் நாடெங்கிலும் போராட்டத்தை விரிவாக்க செயல்படும் ” என சாமானிய மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.