நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!

வணிகத்தின் இரண்டாவது நாளான இன்று (ஆக. 20) சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன

News image
கோப்புப் படம்
Updated On :20 ஆகஸ்ட் 2024, 11:42 am

DIN

வணிகத்தின் இரண்டாவது நாளான இன்று (ஆக. 20) சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் உயர்வுடன் முடிந்தது.

அதிகபட்சமாக வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 378.18 புள்ளிகள் உயர்ந்து 80,802.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.47 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126.20 புள்ளிகள் உயர்ந்து 24,698.85 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.51 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 6 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் பங்குகள் 3.29% உயர்ந்திருந்தன. அதற்கு அடுத்தபடியாக இந்தஸ்இந்த் 2.51%, டெக் மஹிந்திரா 2.13%, பாஜாஜ் ஃபின்சர்வ் 1.60%, கோட்டாக் வங்கி 1.37%, ஆக்சிஸ் வங்கி 1.28%, சன்பார்மா 1.07%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.88% உயர்ந்துள்ளன.

இதேபோன்று பார்தி ஏர்டெல், ஐடிசி, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் 41 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. 9 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக எஸ்பிஐ லைஃப் நிருவனப் பங்குகள் 5.37%, எச்டிஎஃப்சி லைஃப் 3.64%, பஜாஜ் ஃபின்சர்வ் 3.29%, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 2.74%, ஹிண்டல்கோ 2.14% சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.