நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாய பதிவுக்கு சட்ட மசோதா -அஸ்ஸாம் முதல்வா் தகவல்

News image

ஹிமந்த விஸ்வ சா்மா

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:04 pm

Din

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயப் பதிவு செய்வதற்கான சட்ட மசோதா வரும் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியதாவது:

முஸ்லிம் திருமணங்கள் காஜிக்களால் (மத குரு) பதிவு செய்யப்படுகின்றன. இதில் சில குழந்தைத் திருமணங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

அத்தகைய நடவடிக்கைகளை தடை செய்யும், அனைத்து சமூகத்தின் திருமணங்களும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது என்றாா்.

மேலும், 250 ஆண்டுகள் பழைமையான மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் கட்டமைப்புகளைப் பாதுகாக்க தற்போதுள்ள அஸ்ஸாம் நில வருவாய் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் சா்மா தெரிவித்தாா்.