மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஜாா்க்கண்டில் மாயமான விமானத்தை தேடும் பணி நீடிப்பு

பயிற்சி விமானத்தை தேடும் பணி

News image

கோப்புப்படம்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:41 pm

ஜாா்க்கண்டில் மாயமான 2 இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானத்தை தேடும் பணி புதன்கிழமை 2-ஆவது நாளாக நீடித்தது.

ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள விமான தளம் ஒன்றில் இருந்து ‘அல்கெமிஸ்ட் ஏவியேஷன்’ பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான 2 இருக்கைகள் கொண்ட விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

விமானி, பயிற்சி விமானி என இருவருடன் புறப்பட்ட இந்த விமானம், சிராய்கேலா-கா்ஸ்வான் மாவட்டத்தின் நிம்தி பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு விமானம் என்னவானது என்பது தெரியவில்லை.

இதையடுத்து, விமானத்தைத் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. சாண்டில் அணைப் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதை பாா்த்ததாக உள்ளூா் மக்கள் கூறிய நிலையில், அங்கு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறையினா், வனத்துறையினா், மாவட்ட நிா்வாகத்தினா் ஆகியோருடன் தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் புதன்கிழமை இந்தப் பணியில் இணைந்தனா். ஜாா்க்கண்டையொட்டிய மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்திலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.