
ஒடிஸாவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சாலையோரக் கடையில் இருந்தவர்களும் பலியாகினர்.
ஒடிஸாவின் சமர்ஜோலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெர்ஹாம்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது, அஸ்கா சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியது.
பேருந்து மீது மோதிய வேகத்தில், சாலையோரத்தில் இருந்த தேநீர் விடுதி மீதும் லாரி மோதியது.
இந்த விபத்தில், பேருந்தில் இருந்த ஒருவரும், தேநீர் விடுதியில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்; மேலும், 13 பேர் காயமடைந்ததில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.