கொல்கத்தா மருத்துவர் கொலை: சஞ்சய் ராய் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், பாலியல் வக்கிர எண்ணம் கொண்டவர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்
கொல்கத்தா மருத்துவர் வழக்கு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் சிபிஐ

குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராயிடம் சிபிஐ இதுவரை விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் பாலியல் வக்கிர எண்ணம் கொண்டவர் என்றும், தனது தவறுக்காக அவர் ஒரு போதும் வருந்தவில்லை என்றும், விசாரணையின்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இன்றியே பதிலளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி அந்த மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிப்பது தொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.

பயிற்சி பெண் மருத்துவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 14-ஆவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் அவசரமில்லா சிகிச்சை பிரிவுகள் முடங்கி, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று மருத்துவா்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com