மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தரகண்டில் நிலச்சரிவு: 4 நேபாளிகள் உயிரிழப்பு

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 7:29 pm

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

கடந்த வியாழக்கிழமை இரவு உத்தரகண்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரூா்கி பகுதி அருகே உள்ள 70 வீடுகளுக்குள் பத்ரி ராவ் ஆற்றில் இருந்து வெள்ள நீரும், சேறும் புகுந்தன. அந்த ஆற்று நீரால் விளைநிலங்களும் சேதமடைந்தன.

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 1.20 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா். அவா்களின் சடலங்களை மாநில பேரிடா் மீட்புப் படை மீட்டது.

டெஹரி மாவட்டத்தில் உள்ள கெவ்லி கிராமத்தில் பலத்த மழையால் பல வீடுகள் சேதமடைந்தன.

ஹரித்வாா் மாவட்டத்தின் லக்சா் பகுதியில் கங்கை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ராகுல் என்ற நபா், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

புனிதத் தலங்கான கேதாா்நாத், பத்ரிநாத் மற்றும் யமுனோத்ரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.