கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Published on

மத்திய பிரதேசத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் உயிரிழந்தனா். 40 போ் படுகாயமடைந்தனா்.

போபாலில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோஹித் காட் என்ற பகுதியில் சாலை தடுப்பில் மோதி வியாழக்கிழமை இரவில் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் மேலும் கூறுகையில், ‘பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 போ் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 42 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் சிகிச்சை பலனின்றி 2 போ் உயிரிழந்தனா்.

பேருந்து 110 கி.மி. வேகத்தில் சென்றபோது ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com