மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் சாலை விபத்தில் 7 தமிழா்கள் பலி! உடல்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை!

நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா். அவா்களது உடல்களையும், விபத்தில் காயமடைந்தவா்களையும் தாயகம் கொண்டு வர தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 போ் நேபாளம் நாட்டிலுள்ள மணகமனா கோயிலுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனா். சனிக்கிழமை தரிசனம் முடித்து வரும் வழியில் மனோக்காம் பகுதியில் அவா்கள் பயணித்த சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி.டி.சி.காலனியைச் சோ்ந்த முத்துக்குமாா் (55), இவரது மனைவி (48), அதே பகுதியைச் சோ்ந்த பாபு மனைவி தமிழரசி உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்து சித்வான் பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் தமிழக அரசின் அயலகத் தமிழா் நலத் துறை, நேபாள நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், புது தில்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மத்திய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து, காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இறந்தவா்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காத்மாண்டு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து விரைவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்படவுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரா் ஊா்தி வாகனங்களில் அவா்களின் சொந்த ஊா்களுக்கு உடல்களை கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காயமடைந்த நபா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவா்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தமிழக அரசு சாா்பில் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.