மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாபிரபு வல்லபாச்சாரியர் ஆசிரமத்தில் அமித் ஷா வழிபாடு!

சத்தீஸ்கரில் கடந்தாண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2024, 7:45 am

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பரன் நகரில் உள்ள மகாபிரபு வல்லபாச்சார்யா ஆசிரமத்தில் அமித்ஷா வழிபாடு மேற்கொண்டார்.

அமித் ஷாவுடன் முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் சர்மா, உள்துறை அமைச்சர் மற்றம் ராய்ப்பூர் எம்பி பிரிஜ்மோகன் அகர்வால் ஆகியோர் உடனிருந்தனர்.

வல்லபப் பிரிவை நிறுவிய மகாபிரபு வல்லபாச்சாரியார் பிறந்த இடமாக கூறப்படும் சம்பாரண் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள பிரகத்யா பைதக்ஜி கோயில் மற்றும் சம்பேஷ்வர் மகாதேவ் கோயிலில் ஷா வழிபாடு செய்தார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சத்தீஸ்கர் வந்துள்ள மத்திய அமைச்சர் சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றம் காவல்துறை இயக்குறர் ஜெனரல்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். பிற்பகல் புதிய ராய்பூருக்குச் செல்கிறார்.

அவர் மாநிலத்தின் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து சந்திப்பையும் நிகழ்த்தும் ஷா, மாலை 6 மணியளவில் செய்தியாளர்களுடன் சந்திப்பில் பேச உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சத்தீஸ்கருக்கு ஷாவின் முதல் பயணம் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சத்தீஸ்கருக்கு ஷாவின் முதல் பயணம் இதுவாகும்.

சத்தீஸ்கரில் கடந்தாண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மாநிலத்தில் இந்தாண்டு இதுவரை 142 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.