பிகாரின் பாட்னா மாவட்டத்தில் மத விழாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.
பட்னாவின் புறநகரில் உள்ள ஸ்ரீபால்பூர் அருகே உள்ள புன்புன் பகுதியில் மத விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சுவர் இடிந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.