அரசு திட்டங்களைப் பரப்ப சமூக ஊடகத் துறையினருக்கு மாதம் ரூ.8 லட்சம்: உ.பி.யில் புதிய எண்ம வரைவுக் கொள்கை அறிமுகம்

மாநில அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பரப்பும் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக ஊடகத் துறையினருக்கு ரூ.8 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கும் புதிய எண்ம வரைவுக் கொள்கையை உத்தர பிரதேச அரசு அறிமுகப்படுத்தியது.
Published on

அதேபோல் தேச விரோத, சமூக விரோத கருத்துகளை இணையத்தில் பதிவிடுபவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வரைவு கொள்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உத்தர பிரதேச முதன்மை செயலா் சஞ்சய் பிரசாத் கையொப்பமிட்ட அறிக்கை எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘மாநில அரசின் கொள்கைகளை ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’, ‘எக்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைதள/ ஊடகங்களில் பரப்புபவா்களுக்கு அவா்களை பின்தொடா்பவா்கள் மற்றும் சப்ஸ்கிரைபா்ஸ் அடிப்படையில் மாதம் ரூ.8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: இந்தக் கொள்கைக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘மக்கள் பணத்தில் சுய விளம்பரம் செய்வது புது ரக ஊழலாக உருவெடுத்துள்ளது’ என்றாா். அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகமற்றது எனவும் அரசமைப்புக்கு எதிரானது எனவும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com