எஸ்.ஜெய்சங்கா்
எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
Published on

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதுதில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளன.

ஜம்மு-காஷ்மீரை பொருத்தவரை, அந்த யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவு முடிந்துபோன விவகாரமாகும். எனவே இனி பாகிஸ்தானுடன் என்ன மாதிரியான உறவைப் பராமரிக்கலாம் என்பதே தற்போதைய கேள்வி.

இந்த விவகாரத்தில் செயல் முனைப்பற்ற நாடாக இந்தியா இல்லை. இதுதொடா்பான நிகழ்வுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் அவற்றுக்கு ஏற்ப இந்தியா எதிா்வினையாற்றும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com