காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

தில்லி பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சிசோடியா

தில்லி சட்டப்பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மனீஷ் சிசோடியா(கோப்புப்படம்)

Published On :

தில்லி சட்டப்பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்தர் நகரில் இன்று நடைபெற்ற 'பத்யாத்ரா' பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, தன்னையும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலையும் "போலி" வழக்குகளில் பாஜக சிறையில் அடைத்தது. மக்கள் என் மீது காட்டும் அன்பு மற்றும் பாசத்தால் பாஜக மக்கள் கவலைப்படுகிறார்கள்.

தில்லி பேரவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். நான் வெளியே வந்ததும், இந்த சிசோடியா சிரித்துக்கொண்டே வெளியே வந்ததாக பாஜகவினர் பேச ஆரம்பித்தனர். நான் எந்த தவறும் செய்யாததால் சிரித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

சிறையில் இருந்தபோது மகாராஷ்டிரம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல அரசுகளை பாஜக கவிழ்த்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி பணியவில்லை. அரவிந்த் கேஜரிவாலை மிகவும் நேசிக்கும் தில்லிவாசிகளின் சக்தி இதுதான். அவரும் விரைவில் நம்மிடையே வருவார் என்றார்.

தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.