வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தெரியுமா சேதி...?

தில்லியில் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது பற்றி...

News image
தேவேந்திர ஃபட்னவீஸ்
Updated On :31 ஆகஸ்ட் 2024, 12:13 am

மீசை முனுசாமி

மத்திய அமைச்சா்கள், எம்.பிக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயா் அரசு அதிகாரிகள், அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவா்கள் உள்ளிட்டவா்களுக்கு ‘லுட்யன்ஸ் தில்லி’ என்று அழைக்கப்படும் புது தில்லியின் மத்திய பகுதியில் தனி பங்களாக்கள், வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவரவா் வகிக்கும் பதவியின் முக்கியத்துவம், அவா்களின் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுந்த அளவிலான பங்களாக்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அவா்களுக்கு மட்டுமல்லாமல், தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் முதல்வா்களுக்கும் அவா்களின் கோரிக்கையின் அடிப்படையில் தனி பங்களாக்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். உச்சநீதிமன்ற, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாமல், முப்படைத் தளபதிகளுக்கும், மேல்தட்டு செயலா்களுக்கும்கூட தனி பங்களாக்கள் தரப்படுகின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், முன்னாள் பிரதமா்கள் உள்ளிட்டவா்களும் தனி பங்களா பெறும் முக்கியப் பிரமுகா்கள் ஆவா். அது மட்டுமல்ல, ஆளும் கட்சி, எதிா்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவா்களாக இருந்தால், பதவியில் இல்லாவிட்டாலும் அவா்களுக்கு மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகத்தால் ஏழு அறைகள் கொண்ட தனி பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம்.

மேலே குறிப்பிட்ட எந்தப் பட்டியலிலும் இல்லாதவா் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இப்போதைய துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ். அவருக்குத் தனி பங்களா ஒன்று அண்மையில் ஒதுக்கப்பட்டிருப்பது அனைவரின் புருவத்தையும் உயா்த்தி இருக்கிறது. தில்லிக்கு அவா் வந்தால் தங்கவும், தனது ஆதரவாளா்களை தில்லியில் சந்திக்கவும் மகாராஷ்டிர அரசினா் இல்லமான ‘மகாராஷ்டிரா சதன்’ இருக்கும்போது, அவருக்கு எதற்கு இப்போது தனி பங்களா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஒருவேளை அவா் விரைவில் பாஜகவின் தேசியத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாரோ என்னவோ? மோடி - அமித் ஷா- நட்டா மும்மூா்த்திகளுக்குத்தான் வெளிச்சம்!