திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸை விடுவிக்கக் கோரியும் மேற்கு வங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் போராட்டம்

News image
வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட துறவிகள்.- Swapan Mahapatra
Updated On :2 டிசம்பர் 2024, 11:12 pm

DIN

கொல்கத்தா: வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸை விடுவிக்கக் கோரியும் மேற்கு வங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் போராட்டம் நடத்தினா்.

இந்தியா-வங்கதேசம் எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பெட்ரோபோல் பகுதியில் அகில பாரதிய சந்த் சமிதி அமைப்பின் சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

‘வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தப்படும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது தவிர, ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட பிற ஹிந்து குழுக்களும் இந்த போராட்டத்தில் இணைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேற்கு வங்க பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி தலைமையில் புதன்கிழமை மாநிலத்தில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.