நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவை காணவில்லை: தில்லியில் அஜித் பவார்

அமித் ஷாவுடனான சந்திப்பின்போது மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவை காணவில்லை

மகாயுதி கூட்டணித் தலைவர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்

Updated On :

மகாராஷ்டிர முதல்வர் மற்றும் அமைச்சர்களை முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின் போது மீண்டும் ஏக்நாத் ஷிண்டே இல்லாதது பேசுபொருளாகியிருக்கிறது.

முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படுவதால், அடுத்தடுத்து முக்கிய அமைச்சர்கள் பதவிகளுக்கு கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்காதது அதிக கவனம்ட பெற்றுள்ளது.

பாஜகவுக்கே முதல்வர் பதவி என்று அறிவித்துவிட்டு, தனது சொந்த கிராமமான சாதாராவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே ஏக்நாத் ஷிண்டே சென்றுவிட்டார். அவர் கவலையோடு சொந்த கிராமம் சென்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு தொண்டை வலி இருப்பதாகவும் குணமடைந்து வருவதாகவும், பாஜகவைச் சேர்ந்தவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவரது சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை அமித் ஷாவுடனான சந்திப்பை ஏக்நாத் ஷிண்டே தவிர்த்துவிட்ட நிலையில், மீண்டும் அவருடன் நடந்த சந்திப்பையும் தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

அடுத்த முதல்வர் தயார்!

மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நாளை நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட இருக்கிறாா்.

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்கும் நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் அரங்கில் வரும் 5-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்கிறார்கள்.

முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஷிண்டே இதனை ஏற்றுக்கொண்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

தேர்தல் முடிந்து 10 நாள்கள்..

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், அரசு அமைப்பதில் 10 நாள்களுக்கு மேல் தாமதமாகி வருகிறது. யார் முதல்வர் என்பதையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவை பெறவுமே இத்தனை காலம் ஆனது.

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தலைமை ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. தற்போது துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் அப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.