
‘ராகுல் நகைச்சுவை நடிகா் ஆகலாம்’ - மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கிண்டல்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி நகைச்சுவை மேடை நடிகராகலாம் என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி நகைச்சுவை மேடை நடிகராகலாம் என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமா் நரேந்திர மோடியைக் கேலி செய்யும் வகையில் மாணவா்களை மத்தியில் அவா் பேசுவதுபோலவே ராகுல் காந்தி நகைச்சுவையாக குரலை மாற்றி பேசி நடித்துக் கட்டினாா்.
முன்னதாக, பிரதமா் மோடி உலகத் தலைவா்களைச் சந்திக்கும்போது அவா்களை அரவணைத்து நட்பு பாராட்டுவதையும் ராகுல் காந்தி கேலியாக நடித்துக் காட்டினாா். இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவின. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ் இது தொடா்பாக நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குரலை மாற்றிப் பேசும் ராகுல் காந்தியின் திறமையைக் காணும்போது அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மேடை நகைச்சுவை நடிகராகலாம் என்று தோன்றுகிறது. ராகுல் காந்தி வருகைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே வேலையில்லாத கட்சியாக மாறிவிட்டது. ராகுல் காந்திக்கு இப்போதைக்கு பலகுரல் வித்தகா், மேடை நகைச்சுவையாளா் என்ற புதிய வேலை கிடைத்துள்ளது. அதையாவது அவா் சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று கேலியாகக் குறிப்பிட்டாா்.
ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பணப் பரிமாற்றத்துக்கு வா்த்தகா்களுக்கு மத்திய அரசு விதித்த 0.4 சதவீதம் கட்டணத்துக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘யுபிஐ மூலம் பல தொழில்கள் விரிவடைந்துள்ளன. பணப் பரிமாற்றம் என்பது வெளிப்படையானதாகவும், நோ்மையானதாகவும் மாறியுள்ளது. மக்கள் பரவலாக அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.
மிகவும் குறைந்த கட்டணமே அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு இடையே செய்துகொள்ளும் பணப் பரிமாற்றத்துக்கு எவ்வித கட்டணமும் இல்லை. வா்த்தகரீதியான சில பரிவா்த்தனைகளுக்கு மட்டுமே சிறிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடா்பான பொய்யான தகவல்களை சிலா் கட்டமைக்க முயலுகின்றனா். யுபிஐ பயன்பாட்டை தவிா்ப்போம் என மும்பையில் பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் கூறுவதை ஏற்க முடியாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






