
துணைப் பிரதமர் பதவி? - தேசிய அரசியலில் ஈடுபடுவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்!
மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்...

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - கோப்புப் படம்
2029 ஆம் ஆண்டு வரையில் மாநில அரசியலில் மட்டுமே ஈடுபடவுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் விரைவில் தேசிய அரசியலில் களமிறக்கப்பட்டு, அவருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.
இதில், இதுவரை தேசிய அரசியலில் ஈடுபடாத ஒருவரை துணைப் பிரதமராகக் களமிறக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் முதல்வர் ஃபட்னவீஸை தில்லி அழைத்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பெரும் கவனம் பெற்று வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் 2029 ஆம் ஆண்டு வரை மாநில அரசியலில்தான் ஈடுபடுவேன் என முதல்வர் ஃபட்னவீஸ் உறுதியளித்துள்ளார்.
இதுபற்றி, முதல்வர் ஃபட்னவீஸ் இன்று (செப். 3) கூறியதாவது:
“எனது கட்சியும் எனது தலைவர்களும் எனது பணிகள் குறித்து முடிவு செய்வார்கள். அவர்கள் முடிவெடுக்கும் அந்த நாள் நான் நிச்சயமாக தில்லிக்குச் செல்வேன். ஆனால், இன்றைய நிலவரப்படி நான் 2029 வரையில் தில்லிக்கு செல்லப்போவது இல்லை.
என் தலைவர்கள் வரும் 2029 ஆம் ஆண்டு வரையிலாவது என்னை மகாராஷ்டிரத்தில் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யாருக்காவது செய்திகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக இந்தச் செய்தியைப் பரப்பிவிடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis has stated that he will work in state politics until the year 2029.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







