சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ராமர் கோயில் சிஇஓ நியமனம்: காங்கிரஸால் புரிந்துக்கொள்ள முடியாது! - பாஜக சாடல்!

அயோத்தி ராமர் கோயில் சிஇஓ நியமனம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதற்கு பாஜக சாடல்...

BJP National Spokesperson Pradeep Bhandari

பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி - IANS

Updated On :

அயோத்தி ராமர் கோயிலின் தலைமைச் செயல் அதிகாரி நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது அவர்களின் ராணுவ எதிர்ப்பு மனநிலையைக் காட்டுகிறது என பாஜக சாடியுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மத விவகாரங்களை நிர்வாகிக்க நியமிக்கப்பட்டதன் நோக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

இத்துடன், அயோத்தி கோயிலில் நடைபெற்ற நன்கொடை கையாடல் சர்ச்சைகளை மூடிமறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்த நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ராணுவ எதிர்ப்பு மனநிலையைக் காட்டுகிறது என பாஜக இன்று (செப். 3) விமர்சித்துள்ளது.

இதுபற்றி, பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,

“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிய பயங்கரவாதத்துக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்ததில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தானுக்கும் தூக்கம் தொலைந்துபோனதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நம் படைகளைத் தலைமைத்தாங்கிய ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி தற்போது ராமர் கோயில் விவகாரங்களைத் தலைமையேற்று நடத்துவார் என்பது அனைத்து குடிமக்களுக்கும் மிகுந்த உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

இது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் உள்ள படைகள் மீது நாட்டிற்கு உள்ள ஆழ்ந்த மரியாதையை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் இதைப் புரிந்துக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

Summary

The BJP has slammed the Congress party, describing its questioning of the appointment of CEO of the Ayodhya Ram Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.