ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்..!

புதிய அரசு போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்..

Published On :

மகாராஷ்டிரத்தில் அமையவுள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் அரசு மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை எந்தவித வெறுப்பும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிவசேனா(யுபிடி) மூத்த தலைவர் அமபாதாஸ் தன்வே தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமான நிலையில், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதையடுத்து தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று அறிவிக்கப்பட்டதில், குழப்பம் தீர்ந்தது. பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவீஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று மாலை பதவியேற்றுக் கொள்கிறார்.

இதுதொடர்பாக சிவசேனா(யுபிடி) மூத்த தலைவர் அமபாதாஸ் தன்வே பகிர்ந்த எக்ஸ் பதிவில்,

முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஃபட்னாவீஸுக்கு வாழ்த்துக்கள். மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஜெயக்வாடி அணையைப் புதுப்பித்து, நீர்யிழப்பை தடுக்க வேண்டும். நீர்ப்பாசனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். சத்ரபதி சம்பாஜிநகரில் இருந்து புணே மற்றும் ஜல்னா முதல் நாந்தேட் வரை விரைவுச்சாலைகள் அமைக்க வேண்டும். .

சத்ரபதி சம்பாஜிநகருக்கான குடிநீர் குழாய் திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படாவிட்டால், புதிய அரசு போராட்டங்களைச் சந்திக்க நேரிடும், சத்ரபதி சாம்பாஜியாநகரில் இருந்து விமான இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.