புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

எதைப் பார்க்க வேண்டும்? அல்காரிதம் அல்ல, இனி நீங்களே தேர்வு செய்யலாம்!

இனி உங்கள் ஃபீட்... உங்கள் சாய்ஸ்! ஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம் பற்றி..

மொபைல் - கோப்புப் படம்

Published On :

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது, நாம் பின்தொடராத கணக்குகள் பதிவுகள் தொடர்ந்து வந்து நம்மை எரிச்சலூட்டுகின்றது. இதைக் கட்டுப்படுத்த ஆஸ்ரேலிய அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது.

மை ஃபீட், மை வே (My Feed, My Way) என்பது சமூக ஊடக அல்காரிதங்களின் கட்டுப்பாட்டைப் பயனர்களிடமே வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு புதிய சட்ட வரைவுத் திட்டமாகும்.

இந்த முயற்சியின் முக்கிய அம்சங்கள்...

சமூக வலைத்தளங்களை நாம் பன்படுத்தும்போது நாம் பின்தொடராத கணக்குகளின் பதிவுகள், விடியோக்கள் என அல்காரிதம் பரிந்துரைக்கும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

இதைப் பயனர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஆஸ்திரேலியா 'மை பீட் மை வே' என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி சமூக வலைத்தளங்களில் அல்காரிதம் பரிந்துரைக்கும் பதிவுகள் வேண்டுமா அல்லது தாங்கள் பின்தொடரும் நண்பர்கள் மற்றும் படைப்பாளர்களின் பதிவுகள் மட்டும் வேண்டுமா என்பதைப் பயனர்களே தேர்வு செய்யலாம்.

இதன் மூலம் நீங்கள் எதைப் பார்க்க வேண்டும்? என்பதை அல்காரிதம் அல்ல , நீங்களே முடிவு செய்யும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

மெட்டா, டிக்டாக், கூகுள் போன்ற பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களுக்கு அவர்களின் விருப்பப்படி உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில் அவர்களுக்கு 109.2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வரையிலான அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தால் 16 வயதிற்குள்பட்ட சிறார்கள் தேவையற்ற பதிவுகளை எதிர்கொள்ள நேரிடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER