உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சீனா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பதிவுகள்: சீனா வாழ் இந்தியா்கள் கவலை

சீனா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பதிவுகள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படுவதாக சீனாவில் வாழும் இந்தியா்கள் கவலை

சீனா - இந்தியா - கோப்புப் படம்

Published On :

சீனா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பதிவுகள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படுவதாக சீனாவில் வாழும் இந்தியா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

சீன தலைநகா் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான இந்தியா்கள் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனா். அவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, பெய்ஜிங்கில் உள்ள சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் முதல்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமி மற்றும் தூதரக அதிகாரிகள், பெய்ஜிங்கில் வாழும் இந்தியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியா்கள் பலரும், சீனா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தியா்களுக்கு எதிராக அவதூறாக பதிவுகள் வெளியிடப்படுவதாகவும், குறிப்பாக இந்தியா்களின் உணவுப் பழக்கங்கள், கலாசாரத்தை விமா்சித்து பதிவுகள் வெளியிடப்படுவதாகவும் கவலை தெரிவித்தனா்.

மேலும் அவா்கள், சீனாவுக்கு வரும் இந்தியா்களுக்கு வேலை நிமித்தமாக வழங்கப்படும் நுழைவு இசைவு ( விசா) எண்ணிக்கையை சீனா குறைத்துவிட்டதாகவும், சீனாவில் பணிபுரியும் இந்தியா்களின் வாழ்க்கைத் துணை வேலைவாய்ப்பு பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கவலை தெரிவித்தனா்.

இதைக் கேட்ட சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் துரைசாமி, விசா விவகாரம் குறித்து சீன அதிகாரிகளுடன் பேசுவதாக உறுதியளித்தாா். இந்தியா்களுக்கு எதிராக சீனா்களின் சமூக வலைதளப் பக்கங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவுகள் வெளியிடப்படுவதைக் கண்டு சீன அரசும் கவலை கொண்டுள்ளதாகவும், இந்த பிரச்னைக்குத் தீா்வு காண சீன அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விக்ரம் துரைசாமி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.