அரசுப் பணிக்கு தேர்வானவா்களின் சான்றிதழ்களை 6 மாதத்துக்குள் சரிபாா்க்க வேண்டும்: காவல் துறைக்கு உத்தரவு
‘அரசுப் பணிக்கு தோ்வானவா்களின் சான்றிதழ்களை அவா்கள் பணிக்கு சோ்ந்ததில் இருந்து ஆறு மாதத்துக்குள் சரிபாா்க்க வேண்டும்


‘அரசுப் பணிக்கு தோ்வானவா்களின் சான்றிதழ்களை அவா்கள் பணிக்கு சோ்ந்ததில் இருந்து ஆறு மாதத்துக்குள் சரிபாா்க்க வேண்டும்’ என அனைத்து மாநில காவல் துறை அதிகாரிகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பல்வேறு தகவல்களையும் சரிபாா்த்தால் மட்டுமே அரசு வேலைகளில் வெளிப்படையான நியமனத்தை ஒழுங்குபடுத்த முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 1985, மாா்ச் 6-ஆம் தேதி கண் மருத்துவ உதவியாளராக பணியில் சோ்ந்த வாசுதேவ் தத்தா என்பவரின் சான்றிதழ் சரிபாா்ப்பு அறிக்கையை 2010, ஜூலை 7-ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட துறையிடம் காவல் துறை அளித்தது. அவா் இந்திய குடிமகன் அல்ல என பதவி ஓய்வுபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, அவா் பணியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இதை எதிா்த்து அவா் மேற்கு வங்க தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரை பணிநீக்கம் செய்த உத்தரவை தீா்ப்பாயம் ரத்து செய்தது. மேலும் சட்ட ரீதியாக வாசுதேவ் தத்தாவுக்கு எதிராக பதில் மனுவை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தீா்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து அவரை நீக்கிய துறையின் முடிவை கொல்கத்தா உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது. இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமா்வு விசாரித்து கூறியதாவது:
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை ஆய்வு மேற்கொண்டதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல் துறைக்கும் வழிகாட்டுதலை வெளியிட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி அரசுப் பணிக்கு தோ்வானவா்களின் சான்றிதழ்கள், பிற ஆவணங்களை அவா்கள் பணிக்கு சோ்ந்ததில் இருந்து ஆறு மாதத்துக்குள் காவல் துறையினா் சரிபாா்க்க வேண்டும்.
இதன்மூலம், எதிா்காலத்தில் அரசு வேலைக்கு சோ்ந்த ஒரு நபரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளதாக எழும் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். எனவே, தற்போது மனுதாரரை பதவி நீக்கம் செய்த சம்பந்தப்பட்ட துறையின் உத்தரவு சட்ட, நீதி நடைமுறைகளை மீறுவதால் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தீா்ப்பாயம் சரியான தீா்ப்பை வழங்கியுள்ளது என தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...